கடந்த செவ்வாய் (04.11.2008) அன்று புதுவை சட்டக் கல்லூரி, தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி மற்றும் புதுச்சேரி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அனைவரும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகே திரண்டனர்.
4000 மாணவர்கள் அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் வந்தவர்கள் சிங்கள அரசை கண்டித்தும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கோரிக்கை அட்டைகளை கையிலேந்திச் சென்றனர்.
ஊர்வலமாக வந்த மாணவர்கள் புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே திரண்டு முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் மாணவர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் பாசுகரன், ஆனந்தன், பிரதீப், குமரேசன், அன்புமணி, நர்மதா, பவாணி, அறிவுச்சுடர், கலைவாணி ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து;
இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிங்கள இனவெறி அரசால் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்கவேண்டும்.
இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு உதவிகளை வழங்கக்கூடாது.
ஈழத்தமிழர்களின் இன்னல்தீர தமிழர்களுக்காக தமிழீழ தனிநாட்டை இந்திய அரசு ஏற்கவேண்டும்.
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குருதி கையெழுத்திட்டு புதுச்சேரி ஆளுநர் கோவிந்த்சிங் குர்சாரிடம் மனு கொடுத்தனர்.
2 comments:
we are thank to your first information from Puthuvai. we know your support from there to our problem. Thanks for the News.
Best wishes for ur duty and the needfull service.
Truly
Eelaththamilan
இந்த போராட்டத்தில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், என்ற செய்தி பதிவு செய்யப்படவில்லை. பதிவுக்கும் புகைப்படத்திற்கும் நன்றி
Post a Comment