இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசாங்கத்தின் நிலை மாறவே மாறாது என்று சிறிலங்காவின் அமைச்சர் லக்ஸ்மன் அபேயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:
வடக்கில் படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் விடுதலைக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதன் முதற் கட்டமாக இராமநாதன் சுதந்திரபுரம், அருணாசலம் வெற்றிபுரம், கதிர்காமர் எழுச்சிநகர் போன்ற பெயர்களில் மூன்று விடுதலைக் கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளன.
தமிழகம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு என்ன அழுத்தம் கொடுத்தாலும் சிறிலங்கா மீதான நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசில் மாற்றம் எதுவும் இல்லை. இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு சார்பாகவே உள்ளது.
வடக்கில் போர் நடைபெறும் பிரதேசங்களுக்கான அரசாங்கத்தின் உணவுப் பொருள் விநியோகம் குறித்து இந்தியா திருப்தி அடைந்துள்ளது என்றார் அவர்.
நன்றி: புதினம்.காம்

1 comment:
இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக தமிழகம் என்ன அழுத்தம் கொடுத்தாலும் இந்திய அரசாங்கத்தின் நிலை மாறவே மாறாது
நடுவனரசு - ய்யோ பிரானப் இவனுங்க(தமிழமக்களுங்க) இன்னமும்மா நம்மல நம்புரானுங்க
பிரானப் - அது அவனுங்க விதி
Post a Comment