Friday, January 11, 2008

தமிழைக் குறைத்துப் பேசிய சுதர்சன நாயுடு

சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஐந்தாவது தெலுங்கு மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரசு கட்சித் தலைவர் சுதர்சனம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில். “நான் வீட்டில் மட்டுமே தெலுங்கில் பேசுவேன். மற்றபடி அனைத்துமே தமிழ்தான். அதனால் எனது பேச்சில் தவறிருந்தால் மன்னிக்கவும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

சுதர்சனம் பேசுகையில், “தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட தெலுங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நான்கு தெலுங்கு பேசும் அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், அதில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் கோபிநாத் மட்டுமே தெலுங்கில் பேசுவார். நாங்கள் அவர் பேசுகிற தெலுங்கை வாயைப் பிளந்து கேட்போம். கீர்த்தனைகளை எடுத்துக்கொண்டால்கூட தமிழில் பாடப்படுகின்ற கீர்த்தனைகளைக் கேட்கும் போது இனிமையாக இருக்காது. ஆனால் தெலுங்கில் பாடப்படுகின்ற கீர்த்தனைகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். தமிழிற்கு வழங்கப்பட்டது போலவே பழமை வாய்ந்த தெலுங்கிற்கும் செம்மொழி அங்கிகாரம் வழங்க வேண்டும்” என்று ஒரு வழியாக தமிழகத்தில் பேசப்படுவது போன்ற தத்து பித்து தெலுங்கில் பேசி, தனது பேச்சை சுதர்சனம் முடித்தார். - புதுச்சேரி தினமலர் 06.06.2007.

தமிழ்மண்ணில் இருந்துகொண்டு தமிழைக் குறைத்து பேசி தெலுங்கைச் செம்மொழியாக்க கோரிக்கை வைக்கும் சுதர்சன நாயுடுவெல்லாம் தமிழனுக்கு ஒரு தலைவன் என்பது வெட்கக்கேடு!

நன்றி-அச்சமில்லை, சனவரி - 2008

2 comments:

இரா.சுகுமாரன் said...

தங்களின் தகவலுக்கு நன்றி!
அவர்கள் தேசிய வாதிகள். அப்படித்தான் பேசுவார்கள்.

மக்கள் நலனில் மக்களை ஏமாற்றுவதிலும் தான் இவர்கள் தேசிய வாதிகள்.

Anonymous said...

தமிழ்நாட்டுல 'தமிழ்' பெயர் கொண்ட தெலுங்கு இந்தி மொழிகள் பேசும் தமிழ் எதிரிகள் நிறைய பேர் உள்ளார்கள் அரசாங்கம் முதற்கொண்டு. ஒரு கையில் பாப்பான் வெறி தலித் வெறி சாதி மோகம்...இன்னொரு கையில் இந்திக்கார்களை தலையில் தூக்கி கொண்டாடுவது...இந்தி ஆட்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது...தமிழ் நாட்டு விமான நிலையங்கள் சாலை பணிகள் இதற்க்கு அத்தாட்சி.