விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்தியா உடனடியாக தலையிட்டு சிறீலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தவேண்டும் எனக் கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டத்திற்கான நேரம், இடம், காலம் என்பன பற்றிய விபரம் தீர்மானித்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் தெரியவருகிறது.
அதேவேளை திருமாவளவன் எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் இப்போராட்டத்தை தொடங்கவுள்ளார் என சென்னை உள்ளூர் செய்தியாளர் தெரிவித்துள்ளனர்.
நன்றி தமிழ்வின்.காம்
2 comments:
சசி
நல்ல தகவல் எங்கள் ஆதரவை தொல்.திருமாவளவனுக்கு அளிக்கிறோம்.
சசி மற்றும் மாஸ்டர்
மாதவன் ஓட்டல்
அரியாங்குப்பம்.
சோனியா அம்மையாரின் பழி வாங்கும் ரெத்த தாகத்திற்குத் திருமா ரெத்தம் போதாது.
மடிந்த பச்சிளங் குழந்தைகளின் ரெத்தமும் போதாது.
பிரபாகரனின் ரெத்தம் தான் வேண்டுமாம்.
ஏமாற்றாதே,ஏமாறாதே!
பற்றி யெரியப் போகிறது தமிழினம்.
Post a Comment