Sunday, December 21, 2008

தமிழர் விரோத சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றும் போராட்டம்

பெரியார் திராவிரடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ்த்தேசிய பொதுவுடமை கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், சென்னையில் இயக்குநர் சீமான் அவர்களின் மகிழுந்தை எரித்த காங்கிரசு ரௌடிகளின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்தும் புதுச்சேரியில் நாளை (22.12.2008) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போரட்டத்தில் கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான தமிழர் விரோத, சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்புச் செயலாளர் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கத்தின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் ந.மு.தமிழ்மணி, புரட்சிப் பாவலர் இலக்கிய பாசறை ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

பெருந்திரளான பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களும், தமிழினின உணர்வாளர்களும் கலந்துகொண்டு தமிழின விரோத காங்கிரசு கட்சியை சவப்பாடையில் ஏற்றவுள்ளனர்.

1 comment:

தாமிரபரணி said...

தமிழ் இனத்தவருக்கு அவநம்பிக்கையாக இருக்கும் காங்கிரசு கட்சியை பாடையில் எற்றுவது சரியே, தில்லி அரசுக்கு வால் பிடிப்பது, பாவாடை பிடிப்பது, தேவைப்பட்டால் தில்லிகாரனின் காலை முத்தமும் ஈடுவான், அவனுடைய முத்திரத்தையும் குடிப்பான் இந்த தமிழக காங்கிரசு கம்முநாட்டிங்க, தில்லிகாரன் தமிழ்மொழிய அழிக்கனும்னு கங்கனம் கட்டிகிட்டு அலைரானுங்க
இலங்கை தாயொழி தமிழ் இனத்தையே அழிச்சிகிட்டு இருக்கானுங்க
அதுக்கு ஒத்துஉதுறாங்க இந்த ஈன இந்தியா, இதற்கு எல்லாம் ஒருநாள் இந்தியா பதில் சொல்ல வேண்டியது வரும்
தமிழர்களே இனி வரும் குடியரசு தினத்தையும், சுதந்திர தினத்தையும் புறக்கணிப்போம்