Friday, December 14, 2007

மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்...

இருபதாம் நூற்றாண்டின் தமிழின வரலாற்றில் திராவிட இயக்கத்தின் பணிகளை யாரும் மறைக்கமுடியாது.
அதேவேளையில் பெரியாரின் கொள்கையில் முரண்பட்டு திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று உதயமான திராவிட முன்னேற்றக் கழகம் தன் குறிக்கோள்களை அடைந்ததா? இலக்கை அடைய இன்னும் எத்தனை தேர்தல்களை சந்திக்கவேண்டும்? இன்னும் எத்தனை முறை ஆட்சியில் அமர வேண்டும்? நடுவண் அரசில் இன்னும் எத்தனை முறை பங்கேற்க வேண்டும்? இலக்கை அடைய இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? மனசாட்சி உள்ளவர்கள் மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள்...
திராவிட முன்னேற்றக் கழகம்

இயக்கத்தின் குறிக்கோள்

தமிழ்மொழி - தமிழ் இனம் - தமிழ்நாடு - தமிழ்க் கலை - தமிழ்ப் பண்பாடு ஆகியவை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்!
சாதியின் பெயராலும் - மதத்தின் பெயராலும் - கடவுளின் பெயராலும்
வேறு எதன் பெயராலும் தமிழினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது!
சுயமரியாதையும், பகுத்தறிவும் மிகுந்த
சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்கப்பட வேண்டும்!
தாழ்த்தப்பட்டும், பிற்படுத்தப்பட்டும் கிடக்கும் மக்களின்
வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும்!
இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் செழித்திட, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் வளம் பெறவும் வேண்டும்!
இந்த இலட்சியங்களை அடையப் பாடுபடுவதே
திராவிட முன்னேற்றக் கழகம்

ஐம்பெரும் முழக்கங்கள்

1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
5. மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி

Thursday, December 13, 2007

தமிழர் நிலத்தை சூரையாடும் தமிழின எதிரிகள்...

தமிழினத்தின் எதிரிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டிற்கு வெளியில் உள்ள தமிழின எதிரிகள். தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிரிகள். வெளியில் உள்ள எதிரிகளை தமிழர்கள் இனங்கண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிரிகளை தமிழர்கள் முழுமையாக இனங்கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வியப்பு.



தமிழரல்லாதோர் தன்னை "நான் தமிழன்! நான் தமிழன்!!" என்று வெற்று முழக்கமிட்டுக்கொண்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அடிவருடியாக இருந்துகொண்டோ அல்லது தமிழர்களின் எழுச்சியால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைமையை கைப்பற்றியோ தமிழர்களுக்கு தொடர்ந்து இரண்டகம் செய்து வருகிறன்றர்.



இன்றைய அரசியல் சூழலில் தமிழ்நாட்டின் அதிகாரத்தில் உள்ள தமிழின எதிரிகள் தமிழினத்திற்கு எஞ்சியுள்ள இந்த மண்ணின் மீதுள்ள உரிமையையும் பறிக்கின்ற சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இன்றைக்கு வளர்ச்சி என்ற பெயரால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடமிருந்து கைப்பற்றி சிறப்புப் பொருளாதார மண்டலம், மின்நிலையங்கள், விமான நிலைய விரிவாக்கம், துணை நகரத்திட்டங்கள் என்ற பெயரில் தமிழ்மண் தமிழரல்லாதோருக்கு கூறுபோட்டு விற்கப்படுகிறது.



பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் போராட்டத்தின் காரணமாக இந்த நிலக் கொள்ளை தற்காலிகமாக ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Monday, November 12, 2007

திசம்பர் 9 : புதுச்சேரியில் "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை!

தமிழ் மொழி அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அறிவியல் துறையில் தமிழ்ப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிற மொழியில் உள்ள கலைச் சொற்கள் தமிழில் ஆக்கம் செய்யப்பட்டு தொடக்க கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழ் வழிக் கல்வி சாத்தியம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் வளர்ச்சியின் உச்சம் இன்றைக்கு கணினியின் பயன்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனால், கணினியில் தமிழ்ப் பயன்பாடு போதிய அளவில் இல்லை என்றே சொல்ல வேண்டும். முறையாக கணினிப் பயின்றவர்கள்கூட கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில்லை. தமிழில் தட்டச்சு செய்ய மட்டுமே தெரிந்திருப்பதால் தமிழில் கணினி தொழில் நுட்பங்களை அறிந்திருக்கிறார்கள் என்றோ, பயன்படுத்துகிறார்கள் என்றோ கூறிவிட முடியாது.

தமிழ்க் கணினி என்பது முதலில் நம் கணினியைத் தமிழ்க் கணினியாக்குவது. அதாவது, கணினியின் இயங்குதளங்களைத் (Operating Systems) தமிழில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, பரவலாக்குவது. அதைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துவது. இரண்டாவது, கணினியில் அனைத்து நிலைகளிலும் தமிழைப் பயன்படுத்துவது.

ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், டச்சு போன்ற பிற மொழிகளை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் கணினியில் படிக்க முடியும். தமிழை அவ்வாறு படிக்க முடியாத நிலை இருந்தது. ‘ஒருங்குறி’ எழுத்து (Unicode Font) வந்த பின் இந்த நிலை மாறி உலகம் முழுவதும் தமிழில் படிக்க முடியும், எழுத முடியும் நிலை உருவானது.

தற்போது, தமிழ் ஒருங்குறி எழுத்து வடிவம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஒருங்குறி தமிழ் எழுத்தைப் பயன்படுத்திட போதிய தொழில் நுட்ப அறிமுகமோ, பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வோ தமிழர்களிடம் போதுமானதாக இல்லை. எத்தனைத் தொழில் நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தாமல் விடுவோமனால் அனைத்து நிலைகளிலும் தமிழ் என்ற நோக்கம் நிறைவேறாது.இணைய உலகில் வலைப்பதிவுகள் (Blogs) எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கணினியும் இணைய இணைப்பும் மட்டும் இருந்தால், வேறு செலவு ஏதுமின்றி, ஒருவர் தன்னுடைய கருத்துக்களை, எண்ணங்களை உலக மக்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இன்று வலைப்பூக்கள் மாற்று ஊடகத்திற்கு வலு சேர்த்து வருகிறது. இதில் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படுகிறது. கதை, கவிதை, குறும்படம், திரைப்பட விமர்சனம் என இலக்கியப் படைப்பும், விவாதங்களும் நிகழ்த்தப்படுகின்றன.

இதுபோன்று கணினியில் தமிழ்ப் பயன்பாட்டிற்குப் போதிய பயிற்சி இன்றியமையாதது. இந்நோக்கத்தை நிறைவேற்றவே “தமிழ்க் கணினி” வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை. இதில் காலை அமர்வுகள் தமிழ்க் கணினி குறித்ததாகும். அதாவது, நமது கணினியை முழுக்க முழுக்க தமிழில் இயங்கச் செய்வது.

மதியம் அமர்வுகள் கணினியில் தமிழ்ப் பயன்பாடு பற்றியதாகும். குறிப்பாக தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது, இணைய தளங்களில், வலைப்பூக்களில் தமிழில் எழுதுவது போன்றவற்றை எளிமையாக செய்திட தேவையான மென்பொருட்களை அறிமுகம் செய்து பயிற்சி அளிப்பது.

மாலை நிறைவு விழாவோடு பயிற்சிப் பட்டறை நிறைவடைகிறது.

மாலை நிறைவு விழாவில் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.ரங்கசாமி அவர்கள் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.இப்பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைக்கும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் தமிழ் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கணினித் தமிழை முன்னேடுத்துச் செல்ல உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவையான தமிழ் மென்பொருட்கள், அதன் பயன்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய மலர் இலவசமாக வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சிப் பட்டறையில் 100 மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் கணினிப் பயன்படுத்தும் புதியவர்களுக்கு முன்னுரிமைக் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

எனவே, பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள விரும்புவோர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் - பதிவகம் இணையப் பக்கத்திற்குச் சென்று முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.

பதிவுக் கட்டணம் ரூ.50. மாணவர்களுக்கு ரூ.25. பதிவுக் கட்டணம் அரங்கத்தில் செலுத்தினால் போதும்.பயிற்சிப் பட்டறை குறித்த தகவல்கள் உடனுக்குடன் கீழ்க்காணும் தளத்தில் வெளியிடப்படும்:

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

அனைத்து தொடர்புகளுக்கும்:
இரா.சுகுமாரன்,
ஒருங்கிணைப்பாளர்,
புதுச்சேரி வலைபதிவர் சிறகம்.
உலாபேசி: + 91 94431 05825
மின்ன்ஞ்சல்: rajasugumaran@gmail.com

Tuesday, November 6, 2007

தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக "தமிழீழ விடுதலை ஆதரவு" உருவெடுக்க வேண்டும்: இயக்குநர் சீமான்

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவு என்பதுதான் தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வில் அவர் பேசியதாவது:

இங்கே உள்ள சு.ப.தமிழ்ச்செல்வனின் புகைப்படத்தையும் அந்தப் புகைப்படத்தின் முன்னால் உள்ள பூக்களையும் பாருங்கள். புன்னகைக்கும் பூக்களுக்கும் வித்தியாசம் தெரியாத அந்த முகத்தைப் பாருங்கள். தமிழண்ணா உங்கள் புன்னகையை எப்போது நாங்கள் பார்க்கப் போகிறோம் என்று ஏங்கித் தவிக்கிறோம்.

இந்த மண்ணிலே என் உடன் பிறந்தான் மரணத்துக்குக்கூட நாங்கள் கூடி அழமுடியாதாம். ஆனாலும் இது சுதந்திர இந்தியாவாம்.

எந்த நாடு உலகத்தில் அடிமைப்பட்டு கிடக்கிறதோ அந்த நாடெல்லாம் என் தாய் நாடு என்றார் சேகுவோரா. ஆனால் எங்கள் இரத்த சொந்தங்கள் அகதிகளாக அடிபட்டு இரத்தம் சிந்தி ஓடுகிற போது நாங்கள் ஒன்றும் செய்யக் கூடாதாம். என் உடம்பிலும் கூட சுத்த தமிழ் இரத்தம் ஓடுவதாக ஒருவர் சொல்லியிருக்கிறார். தன்னை தமிழச்சி என்கிறார். 17 வருடமாக தன் மகனை சிறைக்கொட்டடியிலே விட்டு புழுதி பூமிகளில் எல்லாம் இன விடுதலைக் கூட்டம் நடைபெறுகிற இடங்களிலெல்லாம் வந்து நிற்கிற பேரறிவாளனின் தாயார் அற்புதத்தம்மாள் தமிழச்சி- பரமக்குடியிலே என் வீட்டில் இருக்கும் அண்ணன் பிரபாகரன் புகைப்படத்தை பார்த்து யார் என்று கேட்கும் உறவுகளுக்கெல்லாம் என் மூத்த மகன் இவன் என்று சொல்லுகிற என் தாய் ஒரு தமிழச்சி- அண்ணா குண்டுவீசி அண்ணணனை கொன்றுவிட்டார்களே என்று கதறிய என் தங்கை உமா ஒரு தமிழச்சி.. ஆனால் என் உடன்பிறந்தானுக்கு இரங்கல் தெரிவித்ததை கொச்சைப்படுத்திய ஜெயலலிதாவும் ஒரு தமிழச்சி என்றால் இந்த மண்ணிலே நாண்டு கொண்டு சாவவதைத் தவிர வேறு வழியில்லை.

சிறிலங்காவுக்கு அமெரிக்கா இராணுவ உதவி செய்தது. பயிற்சி கொடுத்தது. பாகிஸ்தான் 13 வானோடிகளைக் கொடுத்தது. ஆனாலும் விரட்டியத்தனர் விடுதலைப் புலிகள்.

99 தமிழக மீனவர்களை சிறிலங்கா இராணுவம் கடத்திச் சென்று தற்போது விடுவித்துள்ளது. 800 தமிழக மீனவர்களை சிறிலங்கா இராணுவம் சுட்டுப் படுகொலை செய்துள்ளது. காசுமீரத்தில் ஒரு நபர் பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஊடுருவி வந்து விட்டாலே எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கூறுகிற இந்தியா எங்கள் தமிழக மீனவ சகோதரன் சிறிலங்கா இராணுவத்தால் சுட்டு செத்து விழுகிற போது ஏன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று சொல்ல மறுக்கிறது?
எங்கள் தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத நாட்டிலே எங்களுக்கு வாழ என்ன உரிமை உள்ளது? தனித் தமிழ்நாடு கோரி நாங்கள் போராட வேண்டியிருக்காது. அவர்களே அதனை உருவாக்கிவிடுவார்கள்.

கடந்த 58 ஆண்டுகளாக தன்னை வல்லரசு என்று சொல்லுகிற இந்தியா ஏன் தமிழீழத்தைக் கண்டு அஞ்ச வேண்டும்?
ஏனெனில் தமிழீழம் அமைந்த ஐந்தாவது ஆண்டில் அதனை உலக வல்லரசாக பிரபாகரன் மாற்றிவிடுவார் என்று இந்திய அரசாங்கம் அஞ்சுகிறது. நீங்கள் தமிழீழத்தை அங்கீகரித்துப் பாருங்கள். வர்த்தகத் தொடர்புக்கு வந்து பாருங்கள். அவர்கள் செய்து காட்டுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் எருமை மாடு போல் இருக்கிறான். ராஜீவ் கொலையை ஒருபோது மறக்கவும் மன்னிக்கவும் மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசன் சொல்கிறார். எங்கள் தலைவர்களைக் கொன்றவர்களை மன்னிக்கவும் மறக்கவும் மாட்டோம் என்று புதுதில்லியிலிருந்து ஜெயந்தி நடராஜன் கூறுகிறார்.

எத்தனையோ தலைவர்கள் கெஞ்சி மன்றாடி கதறி அழுதபிறகும் இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டாம் என்று கூறியபின்னரும் நீங்கள் இராணுவத்தை அனுப்பினீர்கள்.

ஜி.கே.வாசன் அவர்களே! ஜெயந்தி நடராஜன் அவர்களே!
அந்தத் தமிழீழ மண்ணில் சிங்கள இராணுவம் செய்த கொடூரங்களை விட எங்கள் அக்காள், தங்கைகளை கொடுமையாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய அந்தக் கோரங்களை தமிழன் மன்னித்து விட்டான்- மறந்துவிட்டான்
எங்கள் தமிழீழச் சொந்தங்கள் 40 பேரை நடுவீதியில் கிடத்தில் டாங்கிகளை ஏற்றிக் கொன்றததைத் பார்த்தபிறகும் படித்த பிறகும் மன்னித்துவிட்டான்;
பாலியல் வல்லுறவு அம்பலப்பட்டு விடக்கூடாது என்பதற்காக என் தங்கைகளின் அக்காள்களின் பிறப்புறுப்பை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற உங்கள் இந்திய இராணுவத்தின் கொடுஞ்செயலை மன்னித்துவிட்டான்- மறந்துவிட்டான்.
ஈழத் தமிழர்களுக்கு அப்போது உதவிய இந்திய இராணுவத்திலே இருந்த எங்கள் தமிழக வீரர்களை சுட்டுப் படுகொலை செய்ததை நாங்கள் மன்னித்துவிட்டான் - மறந்துவிட்டான்.
அதனால்தான் ஜி.கே.வாசன் இன்று மத்திய அமைச்சராக உள்ளார். ஜெயந்தி நடராஜன் தில்லியிலே உள்ளார் என்ன வெட்கக் கேடு!

எங்கள் அக்காள் தங்கைகளை நிர்வாணப்படுத்தி திறந்த மார்பகங்களில் தார்க் குச்சியால் சிறீ என்கிற சிங்கள எழுத்தை எழுதியபின்பும் எங்கள் உறவுகள் ஏன் ஆயுதம் ஏந்தக் கூடாது?
அவர்களுக்காக நாங்கள் அழக்கூடாது- பேசக்கூடாது எனில் அப்படியான ஒரு தேசம் எங்களுக்குத் தேவைதான?
தமிழனின் தேசிய மொழி இந்தியாம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலே எழுதிப்போடுகிறார்கள். ஆனால் எந்தத் தமிழன் கோபப்பட்டான்?
இங்கே எவன் செத்தால் தனக்கு என்ன? என்கிற போக்குதான் உள்ளது
சிரஞ்சீவி மகள் ஒரு பாப்பான் மகனோடு ஓடிப்போனதும் இந்தத் தமிழனுக்கு ஒரு செய்தி-
சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்ததும் இந்தத் தமிழனுக்கு ஒரு செய்தி
இந்தத் தமிழர்களை எது பாதிக்கிறது? உங்களை ஒன்றுமே பாதிக்காது. ஏனெனில் இங்கே நடப்பது வாக்கு அரசியல் என்கிற கேவலமான கூத்து.
இதே கருநாடக மண்ணில் பிரபாகரன் பிறந்திருந்தால் நிலைமையே வேறு.
எங்களுக்குப் பேச்சுக்கள்- அறிக்கைகளில் உடன்பாடில்லை. பேசியே எங்களையும் சாக விடுவீர்கள்.

தமிழின விடுதலையை எதிர்க்கின்ற சுப்பிரமணியன் சுவாமியை சென்னை விமான நிலையத்திலேயே வழிமறித்து அடித்து நொறுக்கினால்- துக்ளக் சோவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினால் என்ன?
வரப்பு வாய்க்கால் தகராறுக்காக இரத்தச் சொந்தங்களை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குப் போகிறவர்கள்தானே நாம்!
ஒரு ஓசி பீடிக்காக கொலை செய்துவிட்டு போகிற தமிழன்- ஏன் இனத்துக்காக ஒன்றைச் செய்துவிட்டு போகக்கூடாது?
நாம் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அடைவதற்கு நாடு இருக்கிறது. எதிர்க்கிறவர்களை அழித்துவிட்டால்தான் அனைத்தும் சரிப்படும்.
தமிழின விடுதலையை எதிர்ப்பவர்களே! வந்து பாருங்கள் இராமேசுவரத்துக்கு அந்தக் கரையின் இரத்த வாடை தெரியும்! அவர்களின் கண்ணீர் அந்த இராமேசுவரத்து கடல் நீரில் உப்பாய் கரிக்கும்!

தமிழ்த் திரைப்பட உலகில் அண்ணனைக் கொன்றவனை- அக்காளைக் கொன்றவனை- தங்கையைக் கொன்றவனை- தாயைக் கொன்றவனை கிளைமேக்சில் படுகொலை செய்யும் கதாநாயகனுக்கு சிறந்த விருது கொடுப்பீர்கள்- அது உங்களுக்கு ஹீரோயிசமாகத் தெரியும். அதனையே நிஜத்தில் தமிழீழத்தில் தலைவர் செய்தால் உங்களுக்குத் தீவிரவாதமோ?
தேவாலயத்திலே கர்த்தர் விழிக்கும் நேரத்திலே அந்த நத்தார் நாளிலே ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது ஜான்பால் அறிக்கைவிட்டாரா?

சிங்களத்திலே நன்கு உரையாற்றக்கூடிய- சர்வதேச சமூகத்தின் முன் சிங்களத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்திய ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டபோது சர்வதேச சமூகம் கண்டித்ததா?
ஏன் கண்டிக்கவில்லை? ஏனெனில் அவன் தமிழன். அதுதான் உண்மை.
அறிக்கைகள்- பேச்சுக்கள் எப்போதும் சரிப்படுவது இல்லை. செயல்தான். அண்ணன் பிரபாகரன் அறிக்கை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையே.. செயல்தானே... நமக்கு செயல்தான் முக்கியம்.

எம் தமிழ்ச் சொந்தங்களே! ஒரு புழுவை நீங்கள் அடித்தால் கூட அது அடிக்க அடிக்க துடித்து மேலெழும்போது நம் மீதான அடக்குமுறைகளுக்கான எதிர்ப்பை காட்ட வேண்டாமா? தந்தை பெரியார் ஊட்டி வளர்த்த இனமான உணர்வு இங்கே செத்து எரிந்து சாம்பலாகிவிட்டதா?

ராஜீவ் கொலையை மன்னிக்கவும் மறக்கவும் மாட்டேன் என்று சொல்லுகிற அந்த காங்கிரசில் ஒருத்தன் கூட தமிழ் மகன் இல்லையா? இந்தத் தமிழினம் செய்த தவறுதான் என்ன? பிழை என்ன?
என்னவெனில்-
தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழத்தையும் ஆதரிக்காத எவனுக்கும் இங்கே வாக்கு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.
வாக்கு கேட்டு வருபவனிடம் தமிழீழ விடுதலையில் உன் நிலைப்பாடு என்ன? என்று கேட்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இறையாண்மை வெங்காயம் என்ற பெயரில் இந்தியா ஆயுதம் கொடுத்தால் நாங்களும் எங்கள் தமிழர்களுக்காக ஆயுதங்கள் கொடுப்போம்.
இந்திரா ராடார்களை இந்தியா கொடுத்த பின்னர்தான் எங்கள் தமிழர்கள் கட்டுநாயக்க வான் தளத்தை அடித்தார்கள். அப்போது சிங்களவன் சொல்கிறான், இந்தியா கோளாறான ராடார்கள்களைக் கொடுத்துவிட்டது என்றான். அப்போதே தமிழன் மான நட்ட வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். இப்படிச் சிங்களவன் சொல்வது இங்குள்ள நமக்கு வெட்கமாக இல்லையா?

இன்னைக்கும் இந்தியாக்காரன் ஆயுதம் அனுப்புகிறான். ஆறரைக் கோடி தமிழ் மக்கள் இளிச்சவாயர்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்,
சிறிலங்காவுக்கு ஆயுதங்களை அனுப்பினால்- தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து இங்கு பேசவில்லை எனில் ஆசிட் வீச்சும் அழுகிய முட்டைகளும் வீசப்படும் என்கிற நிலைமை இங்கு இல்லை. அதனால்தான் அவர்கள் செய்கிறார்கள்.

கர்நாடகத்தில் 75 வயது இராசுக்குமார் என்பவ வயது முதிர்ந்து செத்ததற்காக ஆயிரக்கணக்கிலே பேரூந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கூத்தாடிப்பயல் மாரடைப்பில் செத்துப் போனதற்காக இத்தனை நடந்துள்ளது போல் இப்போது இங்கு என்ன நடந்திருக்க வேண்டும், தமிழர்களே! நீங்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுத்த ஓட்டுப் போட்ட 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து நிர்வகிக்கும் இந்திய அரசு தான் சிங்களவனுக்கு ஆயுதங்களைக் கொடுக்கிறது!

அப்படியானால் ஆயுதங்கள் கொடுக்கிற அரசாங்கத்துக்கும் அதனை ஆதரிப்போருக்கும் எங்கள் வாக்குகள் இல்லை என்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

இங்கே இராமன் என்கிற ஒருவன் பெயரைச் சொன்னால் வாக்கு கிடைக்கும் என்கிற போது ஏன் இனவிடுதலையை முன்னிறுத்தி நம்மால் செய்ய முடியலை? ஏன் செய்யக் கூடாது?

ரஜினிகாந்தின் மர உருவங்களுக்கு பால் ஊற்றி சாகிற என் உறவுகளே! நீங்கள் இந்தக் களத்தில் சாக வாருங்கள் என்றார் சீமான்.

நன்றி: http://www.puthinam.com/

Friday, September 28, 2007

இராமன் தமிழர்களால் வழிபடவேண்டியவனோ, போற்றப்பட வேண்டியவனோ அல்ல...

"இராமசாமியின் மனைவி சீத்தாலட்சுமி முனுசாமியுடன் ஓடிவிட்டார் (முனுசாமி அவளை கடத்திச்சென்றுவிட்டார் என்று புகார் தரப்பட்டுள்ளது). சிலமாதம் கழித்து இராமசாமி அவரது தம்பி இலட்சுமணசாமி மற்றும் அவரது கூட்டாளி கோபால்சாமி ஆகியோருடன் முனுசாமி வீட்டிற்குச் சென்று அவரை கொன்றுவிட்டு தன்னுடைய மனைவி சீத்தாலட்சுமியை அழைத்துவந்தார். கொலை குற்றத்திற்காக இராமசாமியும் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக இலட்சுமணசாமி, கோபால்சாமி ஆகியோரையும் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்." என்பது போன்ற ஒரு சேதி நமது நாளிதழ்களில் அன்றாடம் வந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக ஓடியவர்களையும், திரும்ப அழைத்துக்கொண்டு வந்தவர்களையும் நாம் யாரும் வணங்குவதுமில்லை போற்றுவதுமில்லை...

இந்த நாளேட்டுச் செய்திக்கும் இராமாயண கதைக்கும் பெரியஅளவில் என்ன வேறுபாடு உள்ளது. மேற்குறிப்பிட்ட நிகழ்வில் தொடர்புடையவர்கள் என்பதற்காகவே அவர்களை நாம் வழிபடவேண்டுமா? அப்படி வணங்குவதென்றால் நாம் எத்தனை இராமனைத்தான் வணங்குவது...

இராமாயண கதை நாயகன் இராமனின் புகழ்பாடுவதாலோ அவன் பெயரை உச்சரிப்பதாலோ பார்ப்பனர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த நன்மையும் கிடைத்துவிடாது. அவன் பெயரை எப்போது அதிகமாக உச்சரிக்கிறோமோ அப்போதெல்லாம் படுகொலைகளுடன் கலவரம் மூண்டு நாடு திண்டாடுகிறது அல்லது நாடு துண்டாகிறது மீண்டும் நாடு துண்டாக வேண்டாம் என்று நினைப்பவர்கள் இரமனின் சுவடை அழிப்பதே நாட்டுக்கு நல்லது...

Monday, September 10, 2007

தி.க. தொழிலதிபர் திரு. கி. வீரமணி அவர்களுக்கு தெரிவிப்பது யாதெனில்...

தந்தை பெரியாரும் திராவிடர் கழகத் தொண்டர்களும் ஊணையும் உயரிரையும் உருக்கி வளர்த்து தமிழர்களின் விடியலுக்காக போராடிய "திராவிடர் கழகம்" என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தை ஒரு நிறுவனமாக (Private Limited) மாற்றி பெரியாரின் பெயரை வைத்து தொழில் செய்யும் "தி.க. தொழிலதிபர் திரு.கி.வீரமணி" அவர்கள் மருத்துவர் தமிழ்குடிதாங்கியைப் பற்றி கருத்துரைக்க தகுதியற்றவர் என்பதை தமிழுலகம் நன்கு அறியும்.


தந்தை பெரியாருக்குப் பிறகு அந்த இயக்கத்தை அதன் இலக்கு நோக்கி நகர்த்தாமல் பெரியார் திடலிலும் நிதி நிறுவனத்திலும் முடக்கியவர்தான் தி.க. தொழிலதிபர் திரு. கி. வீரமணி அவர்கள்.


பெரியாரின் உண்மைத் தொண்டர்கள்; பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் தோழர். வே.ஆணைமுத்து, தோழர். திருவாரூர் தங்கராசு, தோழர். கொளத்தூர் மணி, தோழர். கோவை இராமகிருட்டிணன், தோழர். விடுதலை இராசேந்திரன் போன்றோர் தலைமையில் அணிதிரண்டு பெரியார் சேர்த்துவைத்த சொத்துக்களை தி.க. தொழிலதிபர் வீரமணியிடம் விட்டுவிட்டு தந்தை பெரியாரின் கொள்கைகளை மட்டும் உள்ளத்தில் நிறுத்தி சொல்லிலும் செயலிலும் இலக்கு நோக்கி பயணிக்கிறார்கள் என்பதை யார் மறைத்தாலும் மறைக்கமுடியாது மறுக்கமுடியாது.


12.09.2007 குமுதம் வார இதழில் தி.க. தொழிலதிபர் வீரமணியார் அவர்கள் மருத்துவர் தமிழ்குடிதாங்கி அவர்களைப் பற்றி பொறுப்பற்ற முறையில் கருத்துரைத்திருப்பது, தான் அண்டிப்பிழைக்கும் ஆட்சியாளர்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன் என்பதை காட்டிக்கொள்வதற்காகவே அன்றி வேறொன்றுமில்லை...


கள்ளச்சாராயம் விற்றவர்கள், ஊழல் பணங்களை பதுக்கி வைத்தவர்கள் எல்லாம் இன்று திடீர் கல்வி வள்ளல்களாக மாறியதுபோல்... தனது அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து நிகர்நிலை பல்கலைக்கழகம் தொடங்கி திடீர் கல்வி வள்ளலாக மாற திட்டமிட்டுள்ள தி.க. தொழிலதிபர் திரு. வீரமணியார் போன்றவர்கள் ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசித்தான் ஆகவேண்டும் என்பது ஊரரிந்த தொழில் இரகசியம்...



ஒரு இயக்கத்தை தொடங்கியவர் அந்த இயக்கத்தை கட்டமைக்கும்போது சில வரைமுறைகளை வகுப்பதும் பிறகு அதை மாற்றிக்கொள்வதும் அந்த இயக்கத்தையும் இயக்கத்தில் இருப்பவர்களையும் சார்ந்தது. இதனால் சமூகத்தில் எந்தவித தீங்கும் நிகழ்ந்துவிடப்போவதில்லை.


இயக்கம் எந்த நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதோ, எந்தெந்தெந்த கொள்கைகளை முன்னிருத்தியதோ, தன்னுடைய இயக்கத்தின் கொள்கை இதுதான் என்று எதை முழங்கியதோ, அதை பின்னுக்குத் தள்ளாமல், மறுக்காமல், மறைக்காமல் மேலும் மேலும் அதை செழுமையாக்கி தன் ஆற்றலுக்கு இயன்றவரை எல்லா நிலைகளிலும் செல்படுத்துவதுதான் அந்த இயக்கத்தின் கடமையாகும். அந்தப்பணியை மருத்துவர் தமிழ்குடிதாங்கி அவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் சொல்லிலும் செயலிலும் சிறப்பாகவே செய்கிறது.


கொண்ட கொள்கைகளை மறந்து அல்லது மறைத்து தன்மானமில்லா தமிழினத்தை உருவாக்குவதையே இலக்காகக் கொண்டு அள்ளும்பகலும் அயராது உழைக்கும் தலைவர்களுடன் கொஞ்சிக்குலாவும் தி.க. தொழிலதிபர் திரு. வீரமணியார் கொள்கை வழுவலைப்பற்றி பேச தனக்கு தகுதியில்லை என்பதை அவரே உணரவேண்டும்.


மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு ஒதுக்கியது கருணாநிதிதான் என்றும் இதில் இராமதாசுக்கு துளியும் தொடர்பில்லையென்றும் குமுதம் நேர்காணலில் தி.க. தொழிலதிபர் திரு. வீரமணியார் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் அல்லது மருத்துவர் இராமதாசு என்றால் சுயநினைவு உள்ளர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற தொடர் சாலைமறியல் போராட்டம்தான். அதற்காக உயிரை ஈகம் செய்தது மருத்துவர் இராமதாசு தலைமையேற்ற இயக்கம் தான். சமூகநீதிக்கான இந்தப்போராட்டத்தை தொடங்க மருத்துவர் இராமதாசு அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் தந்தைபெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் நாள்.


இந்தப்போராட்டத்தை இழித்தும் பழித்தும் பேசிய 102 சாதியினரையும், சாதிப்பற்றால் தனது சாதியையும் சேர்த்துக்கொண்டு வன்னியர்களின் தியாகத்தால் விளைந்த பயனை திருடியது யார் என்பதை உலகம் அறியும்...

துணை நகரம் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் காலத்தின் கட்டாயம் என்பதை யாரும் மறுக்கவில்லை. தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களுக்கு இந்த மண்ணின் மீதுள்ள உள்ள உரிமைகளை பரித்துவிட்டு அந்த மண்ணில் யாரை குடியமர்த்தப்போகிறீர்கள்?. துணைநகரத் திட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், துறைமுகத் திட்டம், அனல் மின்நிலையங்கள், அணுமின்நிலையங்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் சுமார் 50,000 ஏக்கர் நிலம் தமிழர்களிடமிருந்து பிடுங்கி தமிழரல்லாதவரிடம் ஒப்படைக்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தமிழின துரோகச்செயலை தமிழரல்லாதோர் வேண்டுமானால் தலையில் வைத்து கொண்டாடலாம், தன்மானமுள்ளத் தமிழர்கள் ஒருபோது இந்த இழிசெயலை ஏற்கமாட்டார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள வந்தேறிகளுக்கு தமிழர்கள் விடுக்கும் வேண்டுகோள் இதுதான்: "எங்கள் இழிவை நாங்கள் போக்கிக்கொள்கிறோம்... எங்கள் இலக்கை நாங்கள் இறுதிசெய்கிறோம்... "



செந்தமிழன், புதுச்சேரி.

Sunday, August 26, 2007

இந்திய தேசியம் பேசியவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான் என்னைத் தமிழ் தேசியம் பேச வைத்திருக்கிறது...நெடுமாறன்




தினமணி (26.08.2007) செவ்வி...

எல்லோரும் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். இதில் யார் காமராஜ் ஆட்சி அமைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

காமராஜர் ஆட்சி என்றால் முதலமைச்சர் பதவியில் அமர்வது மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வையுடனும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற உணர்வுடனும் செயல்படுவதற்குத்தான் காமராஜர் ஆட்சி என்று பெயரே தவிர, எப்படியாவது பதவியைப் பிடிப்பதற்குப் பெயர் காமராஜர் ஆட்சி அல்ல. காமராஜரைப் புரிந்து கொள்ளாமலே இவர்கள் காமராஜர் ஆட்சியைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.


ஒரு தேசியத் தலைவராக இருந்து, இப்போது தமிழ் தேசியம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அடைந்து விட்டீர்களே, அதற்கு என்ன காரணம்?

இந்திய தேசியம் பேசியவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான் என்னைத் தமிழ் தேசியம் பேச வைத்திருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், நடுவர் மன்றம் தீர்ப்பளித்தாலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்வதுதான் இந்திய தேசியமா? முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டு கடந்துவிட்ட பிறகும் அதை நிறைவேற்றத் தயாராக இல்லை, இந்திய அரசாவது தலையிட்டு நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றி வைப்பதுதானே நியாயம்? இந்திய தேசியம் பேசும் அவர்கள் குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிட்டார்களா, இல்லை நான் குறுகிப் போய்விட்டேனா என்று நீங்களே சொல்லுங்கள். காவிரியில் தண்ணீரே வர வேண்டாம். ஆனால், கர்நாடக அரசு செய்வது தவறு, நீதிமன்றத் தீர்ப்பையும், நடுவர் மன்றத் தீர்ப்பையும் மதிக்க வேண்டும் என்று இந்திய தேசியம் பேசும் அகில இந்தியத் தலைவர் யாராவது ஒருவர் கண்டித்திருந்தாலோ, குரல் கொடுத்திருந்தாலோ, சற்று ஆறுதலாகவாவது இருந்திருக்கும். எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும்போது, இந்திய தேசியம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் அர்த்தமே கிடையாது.


மாநிலக் கட்சிகள் மத்திய அரசில் பங்குபெறும் இன்றைய நிலையில், உங்கள் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதா?

மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவும்தான் மாநிலக் கட்சிகள் தோன்றின. ஆனால், இந்த மாநிலக் கட்சிகள் ஏதாவது ஓர் அகில இந்தியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள் எந்த நோக்கத்துக்காகக் கட்சி தொடங்கினார்களோ அந்தக் கோரிக்கைகள் எதையும் வலியுறுத்துவதும் இல்லை. மாநில சுயாட்சிக்கு சட்டப் பேரவையிலேயே கோரிக்கை போட்ட அதே கட்சி, மத்திய அரசில் அங்கம் வகிக்கத் தொடங்கியபின், அந்த மாநில சுயாட்சிக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஏதாவது நடவடிக்கையை எடுத்தார்களா என்றால் கிடையாது. ஆட்சியிலேயே அங்கம் வகிக்கும்போது, மாநில சுயாட்சி என்கிற கோரிக்கை நிறைவேறிவிட்டது என்றுதானே அர்த்தம்? அப்படிச் சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் கருத்துக்கூற விரும்பவில்லை. ரயில் நிலையங்களில் இருந்த பெயர்ப் பலகைகளில் இந்தி இருக்கக்கூடாது என்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி அறிவித்தார்கள். இப்போது, அந்தக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் மத்திய அரசில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கிறார். அத்தனை நெடுஞ்சாலை மைல் கற்களிலும் இந்தி வந்திருக்கிறதே, அது அவருக்குத் தெரியாமலா நடந்தது? பதவிக்குப் போனபிறகு இந்த மாநிலக் கட்சியினர் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டனர். நீர்த்துப்போய் விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.


இந்த மாநிலக் கட்சிகள் எப்படிச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இவர்களது ஆதரவுக்கு விலையாக அமைச்சர் பதவிகளைக் கேட்டு வாங்குகிறார்களே தவிர மாநிலங்களுக்கான உரிமைகளைக் கேட்டு வாங்கியிருக்க வேண்டும். தேசியக் கட்சிகள் தலைமையில் ஆட்சி அமைப்பதற்குப் பதிலாக, இந்த மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பைத் தேசியக் கட்சிகள் ஆதரிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தத் துணிவு இவர்களுக்கு ஏன் வரவில்லை? இவர்களுக்கு மாநிலங்களில் ஆட்சி வேண்டும். அதைத் தக்க வைத்துக் கொள்ள தில்லியில் செல்வாக்கு வேண்டும், அவ்வளவுதான்.


வீரப்பன் விஷயத்தில் நீங்கள் தலையிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்ததா?


நடிகர் ராஜ்குமார் பணயக் கைதியாகி மூன்று மாதத்துக்கு மேலான பிறகு ஒருநாள் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி என்னைக் கூப்பிட்டனுப்பி, என்னைத் தூதுவராக அனுப்பும்படி வீரப்பனிடமிருந்து செய்தி வந்திருப்பதாகச் சொன்னார். எனக்கும் வீரப்பனுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கும்போது, நான் எப்படிப் போவது என்று மறுத்தேன். கர்நாடகத் தமிழ்ச் சங்கங்களின் வற்புறுத்தலும், அன்றைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் தொடர்ந்த வேண்டுகோளும்தான் எனது முடிவை மாற்றிக் கொள்ள செய்தன. ஒரு மனிதநேய முயற்சியாக, ராஜ்குமாரைக் காப்பாற்றுவதன் மூலம் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையில் இனமோதல் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியாகத்தான் எனது பயணம் அமைந்தது.


ராஜ்குமார் விடுதலையில் மிகப்பெரிய பணப் பரிவர்த்தனை நடந்ததாகச் சொல்லப்படுகிறதே, அது எந்த அளவுக்கு உண்மை?

பண பேரம் நடந்தது என்று தெரிந்திருந்தால் நான் அந்த விஷயத்தில் தலையிட்டிருக்க மாட்டேன்.


உங்களது கணிப்பில் வீரப்பன் எப்படிப்பட்டவனாகத் தெரிந்தான்?

எனக்கு அவன் ஒரு கொடியவனாகத் தெரியவில்லை. அவன் நாகரிகமற்றவனாக இருந்தாலும்கூட, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவனாக இருந்தான் என்பதுதான் நான் பார்த்த உண்மை. நாங்கள் காட்டுக்குள்ளே போனோமே, எங்களையும் பிடித்து வைத்திருந்தால் யார் என்ன செய்துவிட முடியும்? இந்த அரசாங்கம் எங்களைக் காப்பாற்றி இருக்காது என்பதும் எனக்குத் தெரியும். எங்களது பேச்சுவார்த்தையின்போது அவன் சில நிபந்தனைகளை முன்வைத்தான். அதிரடிப்படையின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்டவர்களில் வீரப்பனின் குடும்பத்தினர் எவருடைய பெயரும் இல்லை. "அவர்கள் பெயரை நான் குறிப்பிட்டால் நான் சொன்னது அனைத்தும் எனது குடும்பத்தினருக்காகத்தான் என்கிற கெட்ட பெயர் வந்துவிடும். அதனால்தான் அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை' என்று வீரப்பன் விளக்கியபோதுதான் அவனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.


நீங்கள் அவனைச் சரணடையச் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கவில்லையா?

எங்களது பேச்சுவார்த்தைகள் முடிந்து ராஜ்குமாரை விடுதலை செய்வது என்று முடிவெடுத்த பிறகு, வீரப்பனைத் தனியாக அழைத்துப் பேசினேன். சரணடைந்து விடுங்கள் என்று அறிவுரை கூறினேன். ஒரு மாதம் கழித்து வீரப்பனிடமிருந்து சரணடைய விரும்புவதாகத் தகவல் வந்தது. அதை இரண்டு முதல்வர்களுக்கும் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் அதில் அக்கறை காட்டவில்லை. அதற்குக் காரணம், வீரப்பனை உயிரோடு பிடிப்பதில் நமது அதிகாரிகளுக்குச் சம்மதம் கிடையாது என்று கேள்விப்பட்டேன். மூன்று மாதம் கழித்துத் திடீரென்று தமிழக முதல்வரிடமிருந்து, வீரப்பனைச் சரணடையச் சொல்லலாம் என்று தகவல் வந்தது. அப்போது தேர்தல் வர இருந்த நேரம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வீரப்பனின் கதி என்னவாகும் என்று எப்படிச் சொல்ல முடியும்? தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் செய்தது. வீரப்பனைச் சரணடையச் செய்து, தேர்தலில் அதைப் பிரச்சாரமாக்க நினைத்தார் கலைஞர் கருணாநிதி. அதற்கு நான் உடன்பட்டிருந்தால், வீரப்பன் என் மீது வைத்திருந்த மரியாதையை நான் இழந்திருப்பேன். அதனால்தான் அதற்கு நான் உடன்படவில்லை.


ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இந்தியா தவிர வேறு யாரும் தலையிட நாம் அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அப்படி அனுமதிப்பது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்றும் நான் நினைக்கிறேன். இதை இந்திரா அம்மையார் புரிந்துகொண்டிருந்தார். இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.


இந்திரா காந்தியின் அணுகுமுறை இந்த விஷயத்தில் எப்படி இருந்தது?

1983 ஆம் ஆண்டு கொழும்பில் இனக்கலவரம் நடைபெற்று சுமார் 3,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா அம்மையார் அன்றைய வெளியுறவு ஆலோசகர் ஜி. பார்த்தசாரதியையும் வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். இலங்கை ஒரு சிறிய நாடு, அங்கு நடக்கும் சிறிய பிரச்னைதானே என்று கருதாமல் இரண்டு சீனியர்களை அனுப்பி வைத்து, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்பினார். அதாவது, "இந்தியா இந்த விஷயத்தை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளாது, ஜாக்கிரதை' என்பதைத்தான் வெளியுறவுத் துறை அமைச்சரையும் அமைச்சர் அந்தஸ்திலுள்ள மூத்த வெளியுறவுத் துறை ஆலோசகரையும் அனுப்புவதன் மூலம் உணர்த்தினார் இந்திரா அம்மையார். உலக நாடுகளுக்கும் இந்த விஷயத்தில் யாரும் தலையிடுவதை இந்தியா விரும்பாது என்று மறைமுகமாக எச்சரிக்கும் செய்கை அது. இவ்வளவு செய்தும், ஜெயவர்த்தனா தனது வாக்குறுதியைக் காப்பாற்றாமல் மழுப்புகிறார் என்று தெரிந்ததும், போராளிக் குழுக்களை அழைத்து வந்து, நமது ராணுவத்தின் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஒருவேளை, இந்திரா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால், இலங்கைப் பிரச்னை எப்போதோ சுமுகமான ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதுதான் எனது கருத்து.


தமிழ் ஈழத்தை இந்திரா காந்தி ஆதரித்திருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?


நான் அப்படிச் சொல்லவில்லை. ஆரம்பம் முதலே இந்திரா அம்மையார் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், ஈழத் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் அதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதிலும் இந்திரா அம்மையார் தீர்மானமாக இருந்தார்.


ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட என்ன காரணம்?

ராஜீவ் காந்தி வந்தவுடன், இலங்கைப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.பி. வெங்கடேஸ்வரனை ராஜிநாமா செய்யச் சொன்னதுதான், ஈழப் பிரச்னைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. ஜி. பார்த்தசாரதியும் நரசிம்மராவும் கையாண்ட ஈழப் பிரச்னையை, ரமேஷ் பண்டாரியை அனுப்பிப் பேசச் சொன்னபோது, ராஜீவ் அரசு இந்தப் பிரச்னையை முக்கியமாகக் கருதவில்லை என்கிற தோற்றத்தை இலங்கைக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்படுத்தி விட்டார். அப்போது வெளியுறவுக் கொள்கையில் இலங்கைப் பிரச்னைக்கு ஏற்பட்ட பின்னடைவுதான் இன்றைய நிலைமைக்குக் காரணம்.


இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்வது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று கூறினீர்கள். அது ஏன்?

இந்தியாவின் வடபகுதிதான் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் தாக்குதலுக்கு உட்படும் பகுதியாக இருக்கிறதே தவிர, இந்தியாவின் தென்பகுதி அபாயம் இல்லாத பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையைத் தவிர இங்கே வேறு அண்டை நாடு எதுவும் நமக்குக் கிடையாது. நமக்கு ஆபத்தே இல்லாமல் இருந்த தென்பகுதியில் இப்போது பாகிஸ்தான், இஸ்ரேல் என்று பல அந்நிய சக்திகள் காலூன்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்குத் தலைவலி கொடுக்க இலங்கையைத் தளமாக்க நினைக்கின்றன நமக்கு விரோதமான சக்திகள்.


இந்திரா காந்தியின் காலத்தில் அந்நியத் தலையீடு இலங்கையில் இல்லவே இல்லை என்கிறீர்களா?

நிச்சயமாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனே அமெரிக்காவுடன் ராணுவத் தளம் அமைப்பது பற்றிப் பேச இருக்கிறார் என்பது தெரிந்ததும், இந்திரா அம்மையார் நாடாளுமன்றத்தில் ஓர் எச்சரிக்கை விடுத்தார். இந்து மகா சமுத்திரத்தில் எந்த அந்நிய சக்தி நுழைய முயற்சித்தாலும் அது எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகத்தான் இந்தியா கருதும் என்று அவர் சொன்னதுதான் தாமதம், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது, இலங்கை ராணுவத்தின் விமானங்களையும் பாகிஸ்தானியர்கள்தான் ஓட்டுகிறார்கள். நாம் பயந்துபோய், சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இலங்கை ஆயுதம் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக இந்தியா ஆயுதம் கொடுக்கிறது என்று நமது பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறுகிறார். இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை, தில்லியிலிருக்கும் நமது அரசு உணரவே இல்லை.


இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு நேரடி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?

நேரடி ஆதரவு தர வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. எங்கேயோ இருக்கும் நார்வே இந்தப் பிரச்னையில் பஞ்சாயத்து செய்யும்படி விட்டது இந்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு. இப்போது இந்தப் பிரச்னை தீர்ந்தாலும்கூட அதில் இந்தியாவின் பங்கு இல்லை என்றாகிவிடுகிறதே, அதுதான் தவறு என்கிறேன்.


அப்படியொரு நிலைப்பாடு எடுத்து நாம் அமைதிப்படையை அனுப்பி அவமானப்பட்டது போதாதா? இன்னொரு முறை இந்தியா இந்தப் பிரச்னையில் தலையிட்டு தலைகுனிந்து நிற்க வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா?

தப்பான நிலைப்பாட்டை அப்போது எடுத்ததால்தானே அப்படியொரு நிலைமை ஏற்பட்டது. அமைதிப்படை ஆயுதம் தாங்க வேண்டிய அவசியம் என்ன? "நமது வீரர்கள் வாலிபால் விளையாடுகிறார்கள். இந்திய வீரர்கள்தான் செத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று ஜெயவர்த்தனே சந்தோஷமாகச் சொன்னார். அந்த மோதலுக்குக் காரணம் விடுதலைப்புலிகள் அல்ல என்று இந்திய அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிய திபேந்தர் சிங் தான் எழுதிய புத்தகத்தில் தெளிவாகச் சொல்கிறார். மோதலுக்குக் காரணம் "ரா' உளவுத்துறை செய்த தவறு. இந்த மோதல் ஏற்பட வேண்டும் என்று ஜெயவர்த்தனே விரும்பினார். அது நடந்தது.


ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது மிகப்பெரிய தவறில்லையா? அதற்குப் பிறகும் நாம் எப்படி விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

யார் யாரைக் கொலை செய்தாலும் அது தவறு என்று சொல்பவன் நான். அதுமட்டுமல்ல, நேரு குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவன். ஏழாயிரம் ஈழத்தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்ததே என்று அவர்களும், ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்று விட்டனர் என்று நாமும் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன லாபம்? நமது நாட்டிற்குள் நுழைந்து நமது முன்னாள் பிரதமரை அவர்கள் கொன்றுவிட்டனர் என்கிறோம் நாம். எங்கள் நாட்டிற்குள் நுழைந்து எங்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது உங்கள் ராணுவம் என்கிறார்கள் அவர்கள். இது விடுதலைப் புலிகளின் பிரச்னையோ, ஈழத் தமிழர் பிரச்னையோ அல்ல. இந்தியாவுக்கே ஆபத்தை விளைவிக்கும் பிரச்னையாக மாறிவிட்டிருக்கும் நிலையில், நாம் மௌனம் சாதிப்பது விசித்திரமாக இருக்கிறது.

இந்தப் பிரச்னையில் திமுக மற்றும் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

அந்த இரண்டு கட்சிகளுமே, சாப்பாட்டிற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதுபோலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையை அணுகுகிறார்கள். நியாயமாக இந்தப் பிரச்னையில், மத்திய அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய பொறுப்பு இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சியிடம் தானே இருக்கிறது? ஆனால், முதல்வர் கருணாநிதி திரும்பத் திரும்ப "மத்திய அரசின் முடிவுதான் எங்கள் முடிவு' என்றல்லவா சொல்கிறார். மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணைப் பிரச்னை வந்தபோது, அன்றைய முதல்வர் ஜோதிபாசு வங்காளதேச அதிபருடன் பேசி எடுத்த முடிவைத் தானே மத்திய அரசு அங்கீகரித்து ஒப்பந்தம் போட்டது. ஜோதிபாசுவுக்கு இருந்த துணிவும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த உணர்வும் முதல்வர் கருணாநிதிக்கு இல்லையே ஏன்?


தமிழ் ஈழம் அமையுமேயானால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்காதா? நாளைக்கே தமிழகம் பிரிந்து போக அது வழிகோலாதா?

அது தவறான கண்ணோட்டம். கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவானதற்கு இந்தியா துணைபுரிந்தது. ஒருகாலத்தில் ஒன்றாகத்தான் வங்காளம் இருந்தது. இரண்டு பகுதிகளுமே வங்காள மொழி பேசும் பகுதிகள்தான். மேற்கு வங்கம் பிரிவினை கேட்கிறதா என்ன? தமிழ்நாடும், யாழ்ப்பாணமும் ஒரு காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை. வங்காளி மீது ஏற்படாத சந்தேகம் தமிழன் மீது மட்டும் ஏன் வருகிறது என்பதுதான் எனது கேள்வி. ஆகவே, இந்த வாதத்திற்கு அர்த்தமில்லை.


நிறைவாக, ஒரு கேள்வி. தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலைமை பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆட்சியும் அதிகாரமும் சுயநலத்துக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சரியான மாற்றுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அந்த மாற்றம் ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.


நன்றி: தினமணி




Friday, August 24, 2007

இந்திய - அமெரிக்க அணு உடன்பாட்டை கிழித்தெறிக!

அவனன்றி அணுவும் அசையாது என்பது பழைய நம்பிக்கை. அமெரிக்கா இன்றி அணுவும் அசையாது என்பது புஷ் வகுத்துள்ள புதிய சட்டம்.

இந்தியா போன்ற ஒரு நாடு அணுவாற்றல் உண்டாக்குவதனாலும் கூட அமெரிக்க வல்லரசிடம் இசைவு பெற்றாக வேண்டும், அது விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்பது அமெரிக்கச் சட்டம். இதற்கு 'ஹைடு சட்டம்' என்று பெயர்.

அமெரிக்க நிபந்தனைகளை ஏற்பது கடினம் என்று இந்திய ஆட்சியாளர்கள் முனகிக் கொண்டிருந்தார்கள். அந்த முனகலுக்கு முற்றுப்புள்ளியாக இந்திய - அமெரிக்க அணு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்கச் சட்டத்தின் 123-ஆவது பிரிவின்படியான உடன்பாடு என்பதால் '123 உடன்பாடு' என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க அணுச் சிறையில் இந்தியா 'கைதி எண் 123' ஆகியுள்ளது என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

நன்றி: தமிழ்த்தேசம்