Showing posts with label தமிழினப் பகைவர்கள். Show all posts
Showing posts with label தமிழினப் பகைவர்கள். Show all posts

Friday, January 11, 2008

தமிழைக் குறைத்துப் பேசிய சுதர்சன நாயுடு

சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஐந்தாவது தெலுங்கு மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரசு கட்சித் தலைவர் சுதர்சனம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில். “நான் வீட்டில் மட்டுமே தெலுங்கில் பேசுவேன். மற்றபடி அனைத்துமே தமிழ்தான். அதனால் எனது பேச்சில் தவறிருந்தால் மன்னிக்கவும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

சுதர்சனம் பேசுகையில், “தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட தெலுங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நான்கு தெலுங்கு பேசும் அமைச்சர்கள் உள்ளனர். ஆனால், அதில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் கோபிநாத் மட்டுமே தெலுங்கில் பேசுவார். நாங்கள் அவர் பேசுகிற தெலுங்கை வாயைப் பிளந்து கேட்போம். கீர்த்தனைகளை எடுத்துக்கொண்டால்கூட தமிழில் பாடப்படுகின்ற கீர்த்தனைகளைக் கேட்கும் போது இனிமையாக இருக்காது. ஆனால் தெலுங்கில் பாடப்படுகின்ற கீர்த்தனைகள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். தமிழிற்கு வழங்கப்பட்டது போலவே பழமை வாய்ந்த தெலுங்கிற்கும் செம்மொழி அங்கிகாரம் வழங்க வேண்டும்” என்று ஒரு வழியாக தமிழகத்தில் பேசப்படுவது போன்ற தத்து பித்து தெலுங்கில் பேசி, தனது பேச்சை சுதர்சனம் முடித்தார். - புதுச்சேரி தினமலர் 06.06.2007.

தமிழ்மண்ணில் இருந்துகொண்டு தமிழைக் குறைத்து பேசி தெலுங்கைச் செம்மொழியாக்க கோரிக்கை வைக்கும் சுதர்சன நாயுடுவெல்லாம் தமிழனுக்கு ஒரு தலைவன் என்பது வெட்கக்கேடு!

நன்றி-அச்சமில்லை, சனவரி - 2008

ஈ.வெ.கி.ச. இளங்கோவன் யாருக்குப் பிரதிநிதி?

சென்னையில் 2007 சூன் முதலாம் நாள் நடந்த தெலுங்கு மாநாட்டில் பேசிய ஈ.வெ.கி.ச. இளங்கோவன் (தமிழகத்தின் சார்பில் தில்லியில் அமைச்சராக இருப்பவர்) தனது தாய், மனைவி ஆகியோர் ஆந்திரர் என்பதால் நான் தெலுங்குக்கு மகனா? மருமகனா? என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இப்படி தமிழரல்லாதாரே தமிழ்நாட்டின் சார்பில் அமைச்சர்களாக இருந்தால், எப்படித் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவர்? உண்மைத் தமிழர்கள் உணர்ந்து பார்க்கவேண்டும். -எழுகதிர் ஆசிரியர் அரு.கோபாலன்.

தமிழன் கோட்டாவில் மத்திய மந்திரி பதவி வாங்கிக் கொண்டிருக்கும் ஈ.வெ.கே.ச இளங்கோவன் ஒரு பக்கம் பார்த்தால் தெலுங்கனுக்கு மகனாம் மறுபக்கம் பார்த்தால் தெலுங்கனுக்கு மருமகனாம் அப்படியானால் தமிழுக்கு நீ யார்? வந்தேறிதானே?

நன்றி - அச்சமில்லை சனவரி-2008

Thursday, December 13, 2007

தமிழர் நிலத்தை சூரையாடும் தமிழின எதிரிகள்...

தமிழினத்தின் எதிரிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தமிழ்நாட்டிற்கு வெளியில் உள்ள தமிழின எதிரிகள். தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிரிகள். வெளியில் உள்ள எதிரிகளை தமிழர்கள் இனங்கண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழின எதிரிகளை தமிழர்கள் முழுமையாக இனங்கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வியப்பு.



தமிழரல்லாதோர் தன்னை "நான் தமிழன்! நான் தமிழன்!!" என்று வெற்று முழக்கமிட்டுக்கொண்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் அடிவருடியாக இருந்துகொண்டோ அல்லது தமிழர்களின் எழுச்சியால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைமையை கைப்பற்றியோ தமிழர்களுக்கு தொடர்ந்து இரண்டகம் செய்து வருகிறன்றர்.



இன்றைய அரசியல் சூழலில் தமிழ்நாட்டின் அதிகாரத்தில் உள்ள தமிழின எதிரிகள் தமிழினத்திற்கு எஞ்சியுள்ள இந்த மண்ணின் மீதுள்ள உரிமையையும் பறிக்கின்ற சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இன்றைக்கு வளர்ச்சி என்ற பெயரால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் நிலம் தமிழர்களிடமிருந்து கைப்பற்றி சிறப்புப் பொருளாதார மண்டலம், மின்நிலையங்கள், விமான நிலைய விரிவாக்கம், துணை நகரத்திட்டங்கள் என்ற பெயரில் தமிழ்மண் தமிழரல்லாதோருக்கு கூறுபோட்டு விற்கப்படுகிறது.



பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் போராட்டத்தின் காரணமாக இந்த நிலக் கொள்ளை தற்காலிகமாக ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.