Wednesday, June 25, 2008

தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை-பழ.நெடுமாறன்

அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பா.ம.க.வை தி.மு.க. வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல.

பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம் முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைக்க ஒருபோதும் தயங்கியது இல்லை.

தி.மு.க. தலைமையின் இழிசொல்லுக்கும், பழிக்கும் ஆளாகாத கட்சிகளோ, தலைவர்களோ இல்லை. அந்த அடிப்படையில் தி.மு.க. எந்தக்கட்சிகளோடும் கூட்டுச் சேர முடியாது.

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கொள்கை அடிப்படையிலும், குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையிலும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகின்றன. கூட்டணியின் முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிற இடதுசாரிக் கட்சிகள் அவ்வப்போது விமர்சனம் செய்யாமல் இல்லை.

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்னையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அரசை வன்மையாகக் கண்டித்தன. அதைப்போல கேரளத்திலும் கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தாமல் இல்லை. இதற்காகப் பிற கட்சிகளுடன் உள்ள உறவை மார்க்சிஸ்ட் கட்சி முறித்துக் கொண்டதில்லை.

நன்றி: தினமணி

2 comments:

Anonymous said...

ஓத்தா பாண்டிச்சேரிகாரனுங்க உங்க வன்னிய புத்திய காமிச்சிட்டீங்களேடா

அரியாங்குப்பத்தார் said...

தோழருக்கு வணக்கம்.

நீங்கள் இப்படி இழிவாக பேசும் அளவிற்கு பதிவில் என்ன குற்றம் கண்டீர்...

வன்னிய புத்தின்னா என்ன?

நல்ல புத்தி உள்ள நீங்க
பொறம்போக்கு மாதிரி பின்னூட்டம்
போடலாமா?

நன்றி!