Monday, November 3, 2008

புதுச்சேரி இளைஞர் காங்கிரசு தலைவர் குடிபோதையில் வந்து ஈழத்தமிழர் ஆதரவு உண்ணாவிரத போராட்டத்தில் ரகளை

கடந்த 01-ஆம் தேதி சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போரை கண்டித்தும் இந்திய அரசு சிங்கள இனவெறி அரசுக்கு உதவி செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் பல்வேறு தமிழ் அமைப்புகள் அரசியல் கட்சிகள் புதுச்சேரி மாநிலம் முருங்கப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

அந்தப் போராட்டம் தொடங்கியதிலிருந்தே புதுச்சேரி இளைஞர் காங்கிரசு தலைவர் பாண்டியன் குடிபோதையில் வந்து உண்ணாவிரத பந்தலுக்கு எதிரில் நின்றுகொண்டு உண்ணாவிரதம் இருந்தவர்களைப் பார்த்து தொடர்ந்து இழிவாக பேசியுள்ளார்.

உண்ணாவிரத பந்தலில் இருந்தவர்கள் அமைதியாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தமிழர் தேசிய இயக்க புதுவை மாநிலத் தலைவர் இரா. அழகிரி அவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசும்போது ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரசு அரசையும் காங்கிரசு தலைமைக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக்கொள்ள தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் ஒருசில காங்கிரசு தலைவர்களையும் கண்டித்துப் பேசினார்.

மேலும் “இராசிவ் காந்தி கொலையில் சோனியாவிற்கும், அவருடைய தாயாருக்கும் தொடர்பு உண்டு” என்று சுப்புரமணியசாமி புதுத்தகம் எழுதியதை காங்கிரசார் இதுவரை கண்டிக்காதது ஏன்? என்று வினா எழுப்பினார்.

அப்போது, பந்தலுக்கு எதிரே குடிபோதையில் நின்று கொண்டிருந்த இளைஞர் காங்கிரசு தலைவர் பாண்டியன் தலைமையில் சென்றவர்கள் உண்ணாவிரத பந்தலுக்குள் நுழைந்து பந்தல், பதாகை, ஒலிபெருக்கி போன்றவற்றை சேதப்படுத்தினர். அதைத்தொடர்ந்து நடந்த சாலை மறியலில் புதுச்சேரி மாநில காங்கிரசு தலைவர் ஏ.வி.சுப்ரமணியனும் கலந்துகொண்டார்.

இதனைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தவர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தமிழன உணர்வாளர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் பாவாணன் அவர்களும், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.ஐயப்பன் அவர்களும் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ரகளை செய்த பாண்டியன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டிப்பதை கண்டித்தனர்.

உடனே மறியலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் காங்கிரசார் மீது சாதாரண வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழின உணர்வாளர்கள் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழின உணர்வாளர்கள் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்களையும் காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

உண்மையான குற்றவாளிகளான காங்கிரசார் மீது காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுதலை செய்து விட்டனர்.

புதுச்சேரி மாநில காங்கிரசு அரசின் சனநாயக விரோதப்போக்கை பல்வேறு அரசியல் கட்சியினரும் மனித உரிமை அமைப்பினரும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

2 comments:

Anonymous said...

காங்கிரசு மற்றும் காவல்துறையின் சனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு என் கடுமையான கண்டனங்கள்.
முதுகெலும்பில்லாத இக்கட்சியின் மேலிடத்தை குளிர்விக்க இங்கு இவர்கள் வாலாட்டித்திரிவதன் பலனை வரும் தேர்தலில் அறுவடை செய்வார்கள்.

இரா.சுகுமாரன் said...

செய்திக்கு நன்றி மேலும் விவரங்களுக்கு இந்த தளத்திலும் படிக்கலாம்

புதுச்சேரி இரா.சுகுமாரன்: புதுச்சேரியில் இலங்கைப் பிரச்சனை ஒட்டி விடிய விடிய ஆர்பாட்டம் 400க்கும் மேற்பட்டோர் கைது


http://www.tamilwin.com/view.php?204oQHbdb3bF9ES34d3IWnp3b02h7Gie4 dc4Op1c20edPLIIbe2d82hr4cc0bj0A3e